Wednesday, November 26, 2008

அடியே கொல்லுதே-varanam aayiram

அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம்
என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே


இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போல துரத்துவதும் ஏனோ

முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ

வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்தது
உன் நேசம் என்றது

உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளது
என்மீது பாய்ந்தது

மழைக்காலத்தில் சரியும்
மண் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக்
கண்டேனே

அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம்
என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே

அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால் தள்ளி நடந்தேனே

ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே

சொன்ன வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே

எல்லா வானமும் நீலம்
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே ….

No comments: