Saturday, August 23, 2008

காத்திருந்து காத்திருந்து பழகியவன்

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னைக் கடக்கின்ற ஓர் நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்........
கஸ்ட்டப்பட்டு கஸ்ட்டப்பட்டு பேசியவன்
நீ என்னைக் காதலிக்க உன் தாய் மொழியை
கஸ்ட்டப்பட்டு கஸ்ட்டப்பட்டு பேசியவன்
நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை
சுமந்து செல்ல மறுக்கிறதே...
மொழிகள் எல்லம் முடமாகி என்
மெளனத்தைக் கூட எரிக்கிறதே.
சுவாசிக்ககூட முடியவில்லை எனை
வாசிக்க மண்ணில் எவருமில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

No comments: